தமிழ்ப் புத்தாண்டில்

  • இன்ப துன்பம் எவ்விதத்தில் எவ்வழி வந்தாலென்ன சுவாமி
  • இறைவன் உன் துணையிருக்கையிலே
  • உன் மலர்ப்பதமிருக் கையிலே
  • விகிதாச்சாரங்கள் வர, தர,
  • வைப்பதுன் செயலன்றோ!
  • சுவாமி நாங்கள் உங்கள் மேல் அன்பு
  • கொண்டிருக்கிறோமென
  • எங்களிதயத்திலுணர முடிகிறது.
  • நீங்கள் எங்கள் மேலன்புகொண்டிருப்பதைத்
  • தெரிந்துகொள்வதெவ்வாறு? என்று வினவிய
  • பக்தருக்குக் கருணையுடன் உன்னுடைய
  • இதயத்திலென்மேல் தோன்றுமன்பே நான்
  • உன் மேல்கொண்டுள்ள அன்பின் அடையாளமாகும்
  • ‘நானன்பு கொள்ளாத எவருமே என் மேலன்பு
  • கொள்ள இயலா தெனக்கூறிய’
  • விளக்கந்தான் வாழ்வில் மறக்குமா சுவாமி
  • இன்பதுன்ப விகிதத்தை நீ சிவசக்தி சொரூபமாய்
  • வந்தே காத்தருள்வாயே
  • அல்லன வரினதனைத் தாங்கிடத்தான் உரிய சக்தி
  • தந்துன்னளப்பரிய பெருங்கருணை மழையயைப்
  • பொழிவாய் சுவாமி சாயீஸ்வரா
  • வரும் தமிழ்ப்புத்தாண்டு புதுப்பொலிவை
  • அருட்பொழிவைத் தரவேண்டும்
  • உயிர்கள் உவப்புற வேண்டும்
  • பயிர்கள் செழித்து ஓங்கி வளர வேண்டும்
  • உலகில் சமாதானம் பெருகி அமைதி அன்பு
  • சனாதனம் சாந்நித்தியம் சத்தியம் தர்மம் பிரசாந்தி
  • பிரேமை அகிம்சை மனிதம் வளரவேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0