தமிழ்ப் புத்தாண்டு
- சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வருகவே சாயி
- உன்னருளால் முத்திரை பதித்து முகவரியாய் வருக சாயி
- உன் கருணையால் பத்தரை மாற்றுப் பசும்பொன் னாமுன்
- அருட்கருணை தயையிலே
- நித்திரையிலும் நீ வந்து நலம் மட்டுமே நல்குவாய் சாயி
- உன் பிரேமையிலே
- திரைகடல் ஓடித் திரவியம் சேர்ப்ப வரிதயத்தாமரையிலுன்
- னரவிந்தமலர்ப் பதந்தொழுவர்
- அகத்திருள்விலக்க அருளொளிநல்கிட உனைத் துதிப்பர்
- அகங்களிலே அகமகிழ்ந்துனைப் பூசிப்பர்
- இறையே உன் நாமஸ்மரணையில் நலம் வாழ
- உன்னருளையே வேண்டுவர்
- இறங்கி வந்து இரங்கி நீ தான் கருணைக்
- கொடைய ளிப்பாயதில் மகிழ்வருன் பக்தரே
- சாயிகீதமுன் சங்கல்ப கானம் சங்கீத சாம்ராஜ்ய
- சம்ரக்ஷசண நாதம்
- சாயி வேதம் சகலர்க்கும் சகல பாவம் நீக்குமுன் புனிதப்பாதம்
- சாயின் அன்பு மதமது போக்கும் மனிதனின் மதம்
- சாயி ராமம் ஒன்றே சாஸ்வதமாய்நின்று நிலைக்கும்
- சாகித்திய மந்திரம்
- எத்துணை இடர்துயர்வரினும் விரைந்து வந்து காத்திட
- நீ வர வேண்டும்
- அத்துணை துன்பத் துயர்வரினும் நீ துணை நின்று
- கருணை புரிந்தருள வேண்டும்
- இத்தனைதானின் னலெனினும் அனைத்திலும்
- தாங்குமிதயச் சக்தியைத் தர வேண்டும்
- இப்புவியின் வியாபகமே நீதானென் றனைத்
- துயிர்களுமுணர வேண்டும்
- பயிர்கள் செழித்துப்பாங் காயுலகு சிறக்க வேண்டும்
- உயிர்கள் செலுத்துமன்பில் மனிதம் மலர வேண்டும்
- பாரதம் உலக குருவாய் சனாதன தர்மத்தில் மிளிர வேண்டும்
- எங்குமெதிலும் தமிழ்போலுன் னருட்கருணை விரிந்து
- பரந்துவான் பூமிவரை பெருகிட வேண்டும்
- நீ தங்குமிடமெலாம் பக்தரிதயப் பிரேமையில்
- திளைத்திட வேண்டும்
- நீ தானே தாங்குவாயென ஆனந்தக் கண்ணீரில்
- நனையவேண்டும்
- உன் சரண சரணாகதியே சரணம் சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்