தேன் பாகும் திகட்டிவிடும்

  • தித்திக்கும் தேன் பாகுந்திகட்டிவிடு மதிகமாயின்
  • எத்திக்கும் தானாய்ப் பாயும் புகட்டிவிடு மமுதமாயுமுனை
  • நிந்தித்த மனங்கூடச் சிந்தித்துன்னில் மாற்றங்கொள்ளும்
  • அது துள்ளித்திரிந்துன் அன்புக் கடலில் சங்கமமாகும்
  • அள்ளித்தருமுன்னருட் கருணைதனில் அங்கம் வகிக்கும்
  • பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்தே காவலாயிருக்கிறாய்
  • பற்பல சேவைப் பணிகளைச் செய்திடச் சங்கல்பமளிக்கிறாய்
  • கீதைப்பாதைதனில் நடந்திடவே
  • நற்பாதை வகுத்துத் தருகிறாய்
  • சொற்சுவையும் பொருட்சுவையுமுன்
  • அன்பு அருட்சுவையில் சேர்த்தளித்து
  • அறவாழ்வில் வாழ்வியல் வாழ வைக்கிறாய்
  • சத்யம், தர்மம், சாந்தி, பிரேமையில் மனிதம் மலரச் சந்தர்ப்பம்
  • தந்து சனாதனத்திலுரு வேற்றுகிறாய்
  • ஆத்ம நிவேதனமாய் ஆன்மீகப்பாதை
  • வழிநடத்தி ஆன்மாவை அரங்கேற்றுகிறாய்
  • நாராயண சேவைகளைச் சாயிநாராயணனுன்
  • வேதபாராயணமென்பதை உணரச் செய்கிறாய்
  • மாதா பிதா குரு தெய்வச் சகாவாய் பற்பல அற்புத லீலைகள்
  • புரிந்துன் பக்தர்களுக் கருள்பாலித்து வருகிறாய்
  • பர்த்தியை நோக்கியுன்னருட் பயணமாய்ப்
  • பயணிக்க வைக்கிறாயவர்களில் நீயும்கலந்தாட்
  • கொள்கிறாயதி லாட்சியும் செய்கிறாய்
  • அதியற்புதக்காட்சியும் தந்து மாட்சியளிக்கிறாய்
  • நற்பவி நல்கி இருவினைகளகற்றி மீட்சியை
  • தருகிறாயதில் சாட்சியாய்த் தெரிகிறாய்
  • ‘நானிருக்கப்பயமேன்’ என்றுன் மலரடி தொழவும்
  • அபயஹஸ்தமளிக்கிறாயன்புக் கருணையால்
  • சத்தியசாயி நாதனுன் சங்கமக் கடலில் பன்மதப்
  • பக்த நதிகள் சங்கமிக்கச் செய்கிறாய்
  • அது சாயிமா உனது தாயன்புதானே, தயை செய்யும் தானே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0