உள்ளமதில் நீயிருந்து
- உள்ளமதில் நீ இருந் துயிர்ப்பிக்கிறாய் சாயி
- சாயி கள்ளமற்ற மனங்களில்தானே நிலைத்திருக்கிறாய்
- வெள்ளமாம் துயர்வரினுமதைத் தூர விலக்கி வைக்கிறாய்
- தெள்ளமுதாய்ச் சிந்தைதனில் நீ நிறைந்திருக்கிறாய்
- புத்தம் புதுப்பூவாய்ப் பொய்கையில் பூத்திருக்கிறாய்
- நித்தம் புதுப்புதினமாய்ப் புதிராய்ப்
- புதிதாய் வாசிக்க வைக்கிறாய்
- சாயி சுகந்தத்தைச் சுவாசிக்க வைக்கிறாய்
- சத்தமின்றிப் பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கிறாய்
- ஸ்ரீ சத்திய சாயி தெய்வ மென்ற
- பெயரில்தான் உலா வருகிறாய்
- அந்நிலாவிலும் காட்சிதந்து களிக்கச்செய்கிறாய்
- கோடிகோடி பக்தர்களைப் பாரில் பரப்பிரும்மமாய்
- உன்னில் சுமக்கிறாய்
- சத்யம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையை
- வாழ்வியலில் சமைக்கிறாய்
- உனைத் தேடித்தேடி வருமன்பர்களை
- அதிசய ஆச்சரிய வியப்பிலாழ்த்துகிறாய்
- நாடி நாடி வந்தவர்க்கு நற்பவியாய் அபயமளிக்கிறாய்
- ஓடியோடி வந்துன் திரு வடியில் சரணாகதியடைபவர்க்குன்
- பொற்பாத கமலங்களில் அடைக்கலம்
- தந்துன் சரணமளிக்கிறாய்
- தன்னலமற்ற சேவைகளாற்றிடச் சொல்லித் தருகிறாய்
- பாடிப் பாடி வரும் பக்தர்களின் பண்களுக்குன்
- அருளைப் பரிசளிக்கிறாய்
- அனைத் துயிர்களிலும் அன்பு செய்யென வுரைத்துன்
- அன்புக்கருணை அன்பை அள்ளி அள்ளித் தருகிறாய்
- தனி மனிதச் சுதந்திரத்தை உன் தயையாய்த் தருகின்றாய்
- அதில் உள்ளிருந்துன்னு ணர்வி லியக்கி வைக்கிறாய்
- ‘நீ வேறு நான் வேறு அல்ல’ என்றுரைக்கிறாய்
- அது தெய்வத்திருவாக்கென் றுணர வைக்கிறாய்
- வரலக்குமியாய் வந்து வரங்களனைத்தும் தந்தெமக்கு
- வாழ்வியல் வசந்தம் தந்தே காப்பாய் திருவே
- ஸ்ரீ சத்யசாயி வரலக்குமி சாயி சக்தியே போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: