உன் குங்குமப் பூப்பாதத்தில்

  • குங்குமம் மஞ்சளுக்குக் குறைவில்லை உன்
  • குங்குமப்பூப் பாதத்தில் பணிந்திடவே
  • பொங்கும் புது வாழ்வுக்குப் பஞ்சமில்லை
  • அதில் அங்கம் வகித்திட்ட தெய்வமுனை நினைந்திடவே
  • மங்களங் களருள்வாய் சாயி மங்கள நாயகியே
  • மகிமைகள் புரிந்திட்டே இமையாய்க் காத்திடுமெங்கள்
  • இதயவாசி கருணைத் தெய்வமே உன் அன்பொன்றே
  • சத்தியமது நித்தியம் நிசமாய்க் கவசமாய்
  • திங்கள் மதிமுக வதன ஸ்ரீ சத்திய சாயித் தாயவளே
  • தயைசெய்ய உன்திருநீறும் மாயை போக்கி,
  • மும்மலங்கள் நீக்கியே நற்பவியருள வுந்தன்
  • அபயஹஸ்த ஆசியும் பணிந்து தொழ
  • உன் மலரடித் தாமரைப் பதமலர் அருளாசி வேண்டும்
  • அருள்கவே சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0