வேண்டுவன தந்து

  • சாயி நாராயணனைத் துதித்திடத்தாயி நாராயணியாக
  • நித்ய ஆராதனையாக வருவாய்
  • சத்ய நாராயணன் உன்னைப் பணிந்திட நித்திய
  • பாராயணமாய் நிர்மலமாய்த் தெரிவாய்
  • வேதம் நான்கிலும் வேள்வியாய்
  • வேழ முகத்தவனாயருள்வாய்
  • உனது நாதமெனும் கீதமதில் ஏழிசையாயுறைவாய்
  • காணக் கண்கள் கோடி வேண்டும்
  • காணுமிடமெலாம் காட்சியாய் நீ தெரிய வேண்டும்
  • பேணும் பொருளெல்லாமுன் பேரொளியின்
  • சாட்சிதான் மாட்சியாய் வேண்டும்
  • வானும் பூமியுமான வியாபகத்தி லுன்னருளில்
  • வாழ வேண்டும்
  • வீழும் போதெல்லாம் உன் வீணாகான மாட்சி
  • விடியல் வேண்டும்
  • எழும்போதெல்லாம் உன்எழுச்சி யருளறவுரை
  • மீட்சியாய் வேண்டும்
  • வேண்டுவன தந்து வேண்ட மறந்தனவும் வேண்டாமல்
  • தருவாய் வேங்கடவனே ஸ்ரீ சத்யசாயி
  • நாராயணத் தெய்வமே உன் மலரடி சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0