வேண்டுவன தந்து
- சாயி நாராயணனைத் துதித்திடத்தாயி நாராயணியாக
- நித்ய ஆராதனையாக வருவாய்
- சத்ய நாராயணன் உன்னைப் பணிந்திட நித்திய
- பாராயணமாய் நிர்மலமாய்த் தெரிவாய்
- வேதம் நான்கிலும் வேள்வியாய்
- வேழ முகத்தவனாயருள்வாய்
- உனது நாதமெனும் கீதமதில் ஏழிசையாயுறைவாய்
- காணக் கண்கள் கோடி வேண்டும்
- காணுமிடமெலாம் காட்சியாய் நீ தெரிய வேண்டும்
- பேணும் பொருளெல்லாமுன் பேரொளியின்
- சாட்சிதான் மாட்சியாய் வேண்டும்
- வானும் பூமியுமான வியாபகத்தி லுன்னருளில்
- வாழ வேண்டும்
- வீழும் போதெல்லாம் உன் வீணாகான மாட்சி
- விடியல் வேண்டும்
- எழும்போதெல்லாம் உன்எழுச்சி யருளறவுரை
- மீட்சியாய் வேண்டும்
- வேண்டுவன தந்து வேண்ட மறந்தனவும் வேண்டாமல்
- தருவாய் வேங்கடவனே ஸ்ரீ சத்யசாயி
- நாராயணத் தெய்வமே உன் மலரடி சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்