தங்கத்தேரில்
- தங்கத் தேரில் பவனி வரும் பர்த்திவாசனைக் காணக்கண்கள்
- கோடி வேண்டும்
- இப்புவனமதி லுதித்து வந்த அவதாரமாய் எண்ணி எண்ணி
- மகிழ வேண்டும்
- சப்தபரிகள் பூட்டியதேர் ஏழு ஸ்வரங்களுக்கு மிணையாகும்
- சப்த மாதாக் களாயருளுமுன் சாட்சியும் காட்சியுமது நிசமாகும்
- தேர்வலம் வரும் ஊர்வலத்தில் நகர்வலமாய்ப்பக்தர்
- உடன்வரவேண்டும்
- கண்ணில் நீர்பெருக மனம் நெக்குருகச் சாயீசனின்
- தங்கத் தேர்பவனியை ரசிக்க வேண்டும்
- ஸ்ரீ ராமனாய்க் கண்ணனாய்த் தேர்வலத்தை
- மனதில் பதிக்க வேண்டும்
- ஊஞ்சலாடும் காட்சி கண்டுள்ளம் களித்து
- உவகை கொள்ள வேண்டும்
- தூய வெண்மை நிற அங்கியில் சத்தியத்தை
- நினைக்கவேண்டும்
- சனாதன சாரதியாய்ச் சுவாமியின் கீதைப்பாதை வழிநடந்து
- சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைவழி
- வாழ்வியல் வாழவேண்டும்
- ஏக பரப்பிரம்மமுன் அன்பு அருள் கருணையில் முப்போதும்
- உன் நாம ஸ்மரணையில் திளைக்கவேண்டும்
- ஒவ்வொரு மூச்சிலும் உன் நாமம் உயிர்ப்பிக்க வேண்டும்
- என்றும் துணையிருந்து அனைத்துயிர்களையும் காப்பாய்
- ஸ்ரீ சத்திய சாயீசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்