அருள் நல்கும் அன்னையாய்

  • ஐம்பத்தொரு சக்தி பீடத்திலும் ஐயமின்றி ஆட்சி செய்கிறாய்,
  • மாட்சிதருகிறாய்
  • அருள்நல்கும் அன்னையாய் மீட்சியருள்கிறாய்
  • முன்னையாய், முதல்வியாய், அனைத்துயிர்களிளும்
  • ஒன்றி நிற்கிறாய்
  • அன்பில் அரண் அமைத்துக் காத்து வருகிறாய்
  • துன்பத்தில் துணை வந்து இன்பமளிக்கிறாய்
  • பழவினைகள் நீக்கிடப் பல்லுருவில் அருவுருவாய்
  • வந்து அமைதியளிக்கிறாய்
  • அறம், பொருள், இன்பம், வீடு தந்து
  • இறுதிவரை நற்பவி நல்குகிறாய்
  • மஞ்சள் குங்குமத்தில் மங்காது
  • மங்கலமளித்து மகிழ வைக்கிறாய்
  • மங்கையர்க்கு விருந்தாயருள் பாலிக்கிறாய்
  • சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையில்
  • அறம் அள்ளித் தருகிறாய்
  • மாதா, பிதா, குரு, தெய்வச் சகாவாய்ச்
  • சகாயமளிக்கிறாய்
  • பூமாலைகள் மலர்களிலசைந்து
  • உன் னிசைவை உணர்த்துகிறாய்
  • பிரசாந்தியும் நீயும் ஒன்றே எங்கள்
  • மனச்சாந்தி முழுதும் நீயே
  • ஸ்ரீ சத்யசாயி மாதா வுன் பொற்றாமரை
  • பாதங்களில் சரணாகதி சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0