ஆனந்தலஹரி
- ஆனந்தமய பாபாவின் மதுரப்புன்னகை என்றுமே
- ஆனந்த லஹரி
- ஏன் இந்தத் துயரமென எத்தனையோ நொந்த
- உள்ளங்களுக்குன் கருணைதானின்றும்
- பரமானந்த லஹரி
- சுவாமி இப்பிறவியில் அவதாரமெடுத்து வந்தது
- அவனிக்கே பேரானந்த லஹரி
- சிவசக்தி ஸ்வரூபமாய்ச் சிதிலமின்றிக் காத்திடும்
- நீதான் என்றென்றும் சிவானந்த லஹரி
- சுவாமியுன் போதனைகளனைத்தும் வேதனைகள்
- களைந்திடும் நித்தியானந்த லஹரி
- சத்யசாயீசனின் தரிசனம் ஸ்பரிசனம்சம்
- சம்பாஷனங்களென்றும் பிறவிதோறும் தொடர்ந்திடும்
- சச்சிதானந்த லஹரி
- சாயி பகவானே உன் பாடல்கள் பஜன்கள் அன்பு அற, அறி,
- அருளுரைகள் யாவும் பேரானந்த லஹரி
- சாயீசனே உனது அனைத்து சேவைகளும் ஆற்றுவதால்
- கிட்டிடும் சாந்தியே ஒவ்வொரு இதயத்திலும்
- பூரண ஆனந்தம்
- அருளானந்தம் சுந்தர ஆனந்தம் சத்திய சாயானந்தம்
- நானிருக்கப் பயமேன் எனுமுன் மந்திர வார்த்தைதான்
- பிரேமானந்தம்
- ஸ்ரீ சத்திய சாயிதெய்வமுந்தன் பங்கயப்
- பாதார விந்தங்களில் சத்ய தர்ம சாந்தி பிரேமை
- அகிம்சைப் பூக்கள் தூவித் தொழ வேண்டும். வருக வருகவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்