எல்லாம் அழகு
- எரிவதில் சுடர்விடும் தீபம் அழகானது
- பாபாவுக்கு பூஜைக்கு ஏற்றி வைத்த தீபச்சுடர்
- மிக மிக அழகானது
- நடப்பதில் நதி அழகானது
- சுவாமி நீ நடந்து வரும் அழகு அழகுக் கழகானது
- சுற்றுவதில் புவி அழகானது
- சுவாமி நீ சுற்றி பக்தர்களைப் பார்க்குமழகுதான்
- அழகுக்கு அழகானது
- வளர்வதில் பிறை அழகானது
- உன் மேல் பக்தி நாளுக்கு நாள் வளர்வதில்
- குறை ஏது நிறைதா னென்பதுமே அழகானது
- மின்னுவதில் விண்மீன்களழகுன் பக்தர்கள்
- பிரேமையிலியைந்து வாழும் வாழ்வியலழகானது
- தவழ்வதில் குழந்தையழகு
- நீ தவழ்ந்து கண்ணனா யிவ்வகிலத்திற்கு அருள வந்த தழகு
- விழுவதில் அருவி அழகு
- *பிரேமையின் வடிவங்களேவென’ நீ உரைத்திடும்
- அருளுரைகளானந்த அழகு
- பறப்பதில் புறா அழகுன்னால் பறக்கவிடும்
- வெண்புறாக்களுன் சங்கல்ப அழகு
- உறவில் நட்பழகு நீ சகாவாயும் நட்புறைத லுன்னன்புக்கழகு
- பாடுவதில் குயிலழகுன் பாட்டுக்கு
- மகிழுமுன் பக்தர்மனங்களழகு
- விளைவதில் பயிர்களழகுன் லீலாவினோத மகிமைகள்
- விளைந்தது நர்த்தன அழகு
- மொழிகளில் தாய்மொழி அழகுன் சுந்தரத் தெலுங்கும்
- அதை மொழி பெயர்த்தலுமதைக் கேட்டலுமழகு
- சுவாமியுன் சொல்படி நடந்துன் கருணையன்பில்
- திளைப்பதுதானே உன் அத்யந்த ஆத்மார்த்த
- பக்தர்களெங்களின் சத்ய அழகு
- தங்கத்தமிழுடன் நீ அனைத்து மொழியுரைத்தலுமே
- சாயின் அழகே அழகு
- உன் சேவைகளாற்றிடக்கிட்டுமே ஆத்மாவிற்கே அழகு
- இப்பிறவியில் உனைத்துதித்து வாழ்வது
- இப்பிறவி பெற்ற பயனழகுன் சாந்நித்திய
- அருளழகுதானே சுவாமி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்