கலியுகத்திரு
- யாதுமாகி வந்தாய் நீதான் யாதுமாகியும் நின்றாய்
- ஏது குறை உனக்கு நானிருக்கையிலே என்று
- ‘நான் இருக்கப் பயமேன் என்று
- நற்பவி கூறி நலமளித்துக் காக்க வந்தாய்
- கற்பகத்தருவின் கலியுகத்திரு நின்பொற்பதம்
- பிடித்திடவுமுன் நற்கதிதானே, தானே, வேண்டும்
- உற்றார், உறவு, சுற்றம், நட்பு ஆன்ற அனைத்திற்கும்
- உன் அருட்கருணை தான் வேண்டும்
- பன்மதப் பக்தர் கூடும் பர்த்தியம் பதிதனில் சன்மதனுன்னருட்
- சங்கமத்திலங்கம் வகித்திட
- சண்முகன், கந்தன், வேலன், குமரன்,
- முருகன், குகன், சண்முகன்,
- சேந்தனுன், அன்பு அருளமுதக்கருணைக் கடாட்சம்
- சந்தனக் காற்றின் மணம்போல் மனதில் நிலைத்து
- நீடித்து வாழ்வியலில் வாழவே அருள்தர வருவாய்
- நின் மலரடி சரணம் சாயி சுவாமிநாதா போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்