பக்த லக்ஷணம்

  • சொல்லச் சொல்லத் தித்திக்கும் சாயி நாமம் முக்திக்கும்
  • அள்ள அள்ளக் குறையாதவன் அன்பு வெள்ளம் பக்திக்கும்
  • மெல்ல மெல்ல நடந்து வரும் நடையின் நளினம் நர்த்தனம்
  • எண்ண எண்ண நிரம்பிவிடும்
  • இதயம் முழுதும் சாயி வந்தனம்
  • செல்லச் செல்ல இனித்திடும் பர்த்திப் பயணம் பரவசம்
  • மெல்ல மெல்ல மனம் கரைந்திடும்
  • சாயினருள் வெள்ளப் பரிச்சயம்
  • கேட்கக் கேட்க ரசித்திடும் சாயின் வினோத அற்புதம்
  • பார்க்கப் பார்க்க சலிக்காது சாயின் பற்பல அதிசயம்
  • பக்தனுக்கும் பரமனுக்கும் பரமானந்த யுக பந்தனம்
  • சித்தமெல்லாம் பரவசிக்கும் பரப்பிரம்மம் அவன் தரிசனம்
  • மொத்தமாய்ச் சந்ததியே சரணாகதி யிலவன் ஸ்பரிசனம்
  • சத்தமின்றிச் சங்கல்பிக்கும் பக்தன் மீது அவன் கரிசனம்
  • ஓம்கார மண்டபத்தில் அவன் சாக்ஷாத்காரம் மௌனிக்கும்
  • ரீங்காரமாய்ப் பிரசாந்தி வலத்திலவன் அருள் சித்திக்கும்
  • சிருங்காரமாய்ச் சிரிக்குமவன் அபயஹஸ்தம் மகத்துவம்
  • அலங்காரமாய்த் தபோவனத்ததி லவன்அருளமுதம் கிட்டிடும்
  • ‘பங்காரு’ என விளிக்கும், கனக அம்பரம் தரித்த
  • சாயின் நயன தீட்சை நிச்சயம்
  • சாயி இருக்கக் குறையில்லை இது சத்தியம்
  • சுவாமி பணித்த சேவைகள் ஆற்றுவது நமது லட்சியம்
  • சுவாமி பாதை நடப்பதுதான் பக்தர் நமது இலட்சணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0