சங்கமிக்கும் நதிகள்

  • சாயிநாதனுன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனத்தில்
  • திளைத்திருத்தல் மதுரம்
  • சத்தியநாதனுன் இசையும் இசையமுதமு மிறையம்சமும்
  • சமூகக் கல்வி, குடிநீர், மருத்துவ, ஆன்மீக
  • சேவைப் பணிகளில் பணித்திருத்தலும் மதுரம்
  • உன் அருட்கடலில் சங்கமிக்கும் நதிகளாய்ப்
  • பக்தர்கூட்டக்குழு மங்களபஜன் நாராயணசேவை
  • நாம சங்கீர்த்தன நாமஸ்மரணையில்
  • திளைத்திருத்தலும் மதுரம்
  • உன் அவதார காலத்திலுன்னருளில் முகிழ்த்திருப்பதும் மதுரம்
  • இறையே எங்களின் மறையே பர்த்திவாசனுன்
  • பரமப் பவித்ரப் பிரசாந்தியில் பன்முகப்பக்தர்களும்
  • பங்குபெறும் அணிவகுப்புகளிலும் மகிழ்ந்து
  • திளைழ்த்திருப்பதுவும் மதுரம்
  • பர்த்தியில் ஒவ்வொரு நாளும் திருநாள்தான்
  • உன்னருட் கருணையில் திளைக்கும் ஒவ்வொரு
  • கணமும் திரு உன் நாள்தான்
  • மும்மலங்கள் போக்கியே நீக்கியே மனிதம்
  • மலர்ந்திட அருள்வாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0