வெளி வளியில்

 • வெள்ளிதனில் வேள்வியாய் வந்து அதனில்
 • வெம்மையாய் யாய் வந்திடுவாய்
 • கேள்வியிலே பதிலாகியுமதன் பொருளாயும்
 • பொருட்சுவை தந்திடுவாய்
 • மேன்மையிலே நீதிகொள் சைவமாகச் சிவமாகச்
 • சிவசக்தி ஸ்வரூபிணி நீ மங்கள நாள் தன்னில்
 • மஞ்சளொடு, குங்குமமும் தரமகிழ்வுடனே வந்திடுவாய்
 • திங்கள் முடி சூடிய கங்கை அணிந்தவ முக்ண்ணனின்
 • முதன்மையாய் ஆதி அந்தமாய் ஐங்கரனின் அழகு,
 • வேலவனின் அன்னையாய், ஆதிசக்தி ஸ்வரூபமாய்
 • அபயஹஸ்த அருள் தருவாய்
 • ஓம் காரமும், ஒலிவடிவும், வெளி வளியும், நிறைந்தே
 • ஆதிசக்தியுடன் திகழ்வாய்
 • சாயி அன்னையா மெங்கள் ஸ்ரீ சத்யசாயி மாதா உனக்குச்
 • சாஷ்டாங்க நமஸ்காரம்
 • சகல அல்லவை களகற்றி நல்லவைகள் தந்து நலமுடன்
 • வாழ அருள் செய்ய வரவேண்டும் பர்த்தீஸ்வரி
 • பரமேஸ்வரி, சாயீஸ்வரி தாயே, உனக்குச் சுபமங்களம்
 • நீக்கமற நிறைந்த நிறை மதியே நின்
 • பதமலரடி சரணம் போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0