சாயி குருவாய்

  • தேவ குரு, ஞான குரு, பிரம்ம குரு, விஷ்ணு குரு,
  • சிவ குரு, சக்தி குரு, சத்ய குரு, சாயி குரு,
  • எவ்வடிவிலு முனைக்கண்டால் ஆனந்தமே
  • துதித்தால் பேரானந்தமே, வந்தனை செய்தால் பரமானந்தமே
  • உன்னடி தொழுதால் ஆத்மானந்தமே
  • வியாபகமே, விக்னவிநாயகனே, வியப்பே, வித்தகமே,
  • வித்தகனே, விரிசடைத் தத்துவமே,
  • ஸ்ரீ சத்ய சாயித்துவமே, சத்துவமே, சமத்துவமே,
  • சத்தியமே, சரித்திரமே, சாகித்யமே, சாயுஜ்யமே
  • சாந்நித்யமே, சகலமே, சர்வமே, சமத்துவமே,
  • நீமட்டும் தானெங்களின் மொத்தமே, சொந்தமே
  • பன்மதப் பக்தர்களின் சமதத்துவமே அன்பு
  • மட்டும்தானுன் மதம்
  • நிதமதிலே வாழ்ந்தே உன்னருட் கொடை
  • மழையினில் நனைந்தே
  • உன் அத்துனைப் புனிதச் சேவைகளும் செய்திடவே
  • அருந்தவமாம் இவ்வையத் துயிர்கள் இனிதே
  • வளமுடன் வாழவே, மனிதம் வளர்ந்திடப்
  • பக்தி சனாதனம் பெருகிடச் சாத்வீகம் மலர்ந்திட
  • பக்தி உயர்ந்திடச் சத்சங்கங்கள் உருவாகித்
  • தர்மம் தழைத்திட நீ துணை வந்தருள வேண்டும்
  • உற்றதுணையாய், உடன் உள்ளில், உயிரில், இருக்கவேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயி குரு தெய்வமே சாயி சிவமே,
  • சாயித்தத்தாத்ரேயரே, உன் திருவடி சரணம் சரணம்.
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0