விநாயகர் சதுர்த்தியில்

  • ஆனைமுகக்கடவுளுக்கு ஆனந்த வந்தனம்
  • முகமன் கூறி முகவரியாகும் பஞ்சமுக கணேசனுக்கு
  • ஆத்மார்த்த வந்தனம்
  • ஈசனின் மூத்த மகன் இளையோன் கந்தன் குமரனின்
  • பாச நேசத் தமயன்
  • சக்தீஸ்வரியின் சங்கல்பப் புதல்வன் மூலாதாரன் புவனத்தின்
  • மன்னன் பாலச்சந்திரன் தாள் பணிந்தே வந்தனம்
  • பாலும் நல்தேனும் பாகும் பருப்பும் என நான்கு
  • பொருள் தந்து மூன்று சங்கத்தமிழ் கேட்ட
  • அவ்வைக்கும் இளவல்முருகனுக்கும் வள்ளிக்கும்
  • தூது சென்ற கணபதியுன் கருணைக்கும் அருட்கடல்
  • விநாயகக் கடவுளுக்கும், காக உருவில் வந்து அகண்ட
  • காவிரி தந்த ஏகதந்தனுக்கும் ஏகாந்த ஆனந்த வந்தனம்
  • பஞ்சமுக கணபதிக்குப் பலப்பல அபிஷேகம்
  • தஞ்சம் என்றே வந்தோர்க்கு அபயமளித்திடும் அபயஹஸ்தம்
  • ‘நானிருக்கப் பயமேனெ’ன்னும் சாயி கணபதிக்கு நமஸ்காரம்
  • அவல் பொரி மோதகம் அப்பம் எனப் பற்பல
  • நைவேத்தியங்கள் படைத்து உளம்மகிழப் பூசை செய்து
  • வணங்கும் ஒற்றைக்கொம்பன் கஜேந்திரனுக்கு
  • என்றென்றும் நமஸ்காரம்
  • பர்த்தித்தலப் பிரசாந்தி சாயி கணேசனுக்குப்
  • பிறந்த நாள் அலங்காரம், கொண்டாட்ட நமஸ்காரம்.
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0