சர்வதர்மம்
- சாயி உன் நாமம்தான் சர்வரோக நிவாரணம்
- சாயி உன் நீறுதான் சர்வ துக்க பவதாரணம்
- சாயி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பர்சனம்,
- சர்வ ஜென்ம சாபல்யம்
- சாயிவுன் நினைவு, கனவுமே, சர்வஜன்மப் பிரத்தியட்சம்
- சாயி உன் துணையே சகலகலா ஜெயரக்ஷணம்
- சாயி உன் பக்தியே சர்வதர்ம லக்ஷணம்
- சாயி உன் சனாதன சேவையே
- மானுஷதர்ம வர்த்தனம்
- சாயி உன் ‘நானிருக்கப்பயமே’ னெனும் சொல்லே
- சர்வவல்லப் பிரத்தியட்சம்
- சாயிவுனை உணர்த லுண்மையே அலங்காரமதிலுன்
- கரிசனமே ஜெய ரக்ஷணம்
- சாயி உன் பக்தரென்பதே சனாதன சர்வ லட்சணம்
- சாயி உன் பிரசாந்தியே சர்வ தர்ம சாஸ்வதம்
- சாயி உன் நாமஸ்மரனையே சகல துஷ்ட நிக்ரஹம்
- சாயி உன் பஜன்பண்களிசைப்பதோ சகல துக்க சம்ரட்சனம்
- சாயி உன் பாதபங்கஜமே எங்களின் சாஷ்டாங்க
- நமஸ்காரம் நமஸ்காரம். நற்பவியாம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்