ஆனந்தம் ஆனந்தம்

  • கார்முகில் வண்ணன் சாயிகிருஷ்ணனைக்
  • கண்டாலானந்தம்
  • தார்மீக எண்ணம் கொண்ட சத்திய சாயி
  • கிருஷ்ணனின் தரிசனம் ஆனந்தம்
  • பார்மீதில் பர்த்தியி லவதரித்திட்ட பார்த்தனின்
  • பதமலர் தொழுவதானந்தம்
  • தேர்வலம்போல், நடைநடந்து வந்து பக்தர்
  • கடிதம் பெறுவதும் ஆனந்தம்
  • நகர்வலமாய், மெதுவாய் நடை நடந்து வந்தே விபூதி
  • சிருஷ்டித்துத் தருவதும் பேரானந்தம்
  • நிகர்இல்லையித் தெய்வத்தின் தெய்வம் சாயிகிருஷ்ணனின்
  • கருணை அன்பிற்கே எனும் எண்ணம்தானானந்தம்
  • மலர்வண்ண மாயவன் சாயிகிருஷ்ணனின்
  • லீலா வினோதங்கள் கேட்டல் பார்த்தல் படித்து
  • ரசித்தல் ஆனந்தம்
  • சுடர்ஒளியாய், ஞானம் தந்து ஞாலத்தில் நற்பவி
  • நல்கும் சாயிகிருஷ்ணனின் அன்பு அருள், அற,
  • அறிவுரை கேட்டலும் ஆனந்தம்
  • படர்கொடிக்கும் பறவைகளுக்கும் அனைத்துயிர்களுக்கும்
  • அன்னபூரணியாய் அன்னையாய் அன்னம்
  • பாலிக்கும் சாயிகிருஷ்ண அவதாரமே ஆனந்தம்
  • அடர்வனத்திலும், ஆழியிலும் கஜேந்திர மோட்சமாய்
  • அபயம் தந்து காக்கும் சாயி முரளி கிருஷ்ணனின்
  • மயக்கும் வேணுகானக் குழலிசையும் ஆனந்தம்
  • இடர்வரினும் இணைந்து வந்து துணையாய்த்
  • தொடர்ந்திருக்கும் சாயி கிருஷ்ணனின்
  • ஸ்பரிசனமும் ஆனந்தம்
  • தொடர்வாழ்வியலில் சத்யசாயி கிருஷ்ணனின் சத்யதர்ம
  • சாந்தி பிரேமை அஹிம்சையாம்
  • அன்பின் அழகும் ஆனந்தம் ஆனந்தம்
  • சத்யானந்தம், சதா ஆனந்தம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0