ஆதாரமே நீதான்
- கனகதாரைத்தாயே ஆதாரமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- நினைவுதோறுமென்றும் உன்பாதாரவிந்தம் சரணமே
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- நீயுமுன் பாதாரவிந்தமும் தானே
- கேதாரன் நாயகியாய்க் கவசமாயிருந்து காக்கின்றதே
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- முழு நிலவுப் பூர்ணிமையிலுன் மதிமுகம்
- முழுவதுமாயொன்றிவிடச் செய்துவிடுவதுண்மையே
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- சத்யநாராயண விரதப் பிரசாத அவதாரமே
- உன் பவதாரமானதுவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- பொங்கும் மங்கலமாய்த் தங்குதடையின்றிக்
- கருணைமழை பொழிகின்றாயே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- மங்களச் செவ்வாய் வெள்ளியில்
- ஸ்ரீ சத்ய சாயி மகாலட்சுமியாயுனைப்
- போற்றித் துதித்திடவும் நீ திங்களாய் வருவாயே
- வரவேண்டும் ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- வரமருள்வாயே வந்தருள்வாயே கருணைபுரிவாயே
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- ‘நானிருக்கப்பயமே’னெனும் உன் மந்திரச் சொல்
- மாற்றம் தருமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- சித்ராவதிச் சித்திரமா யுன்லீலாவினோதங்கள்
- வியக்க வைக்குமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
- என்றென்றும் உன் திவ்யச் சரணாகதியில் வாழ்வியல்
- வாழ்ந்திட உன் அபயஹஸ்த ஆசி தர வேண்டும்
- ஸ்ரீ சாயி மகாலட்சுமித் தாயே போற்றி போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்