சாயி சிவமே
- திருவாதிரை நட்சத்திரத்திருவே ஸ்ரீ சத்திய சாயீசா – உன்
- திருமுகதரிசனம்தருமே நித்திய சந்தோசத்தைக்
- கற்பகத் தருவாய் திரு அவதாரமாய்ப்
- பர்த்தியிலவதரித்த பர்த்தீசாசா உன் ஒரு அவதாரம்
- தந்ததே விஸ்வரூப பவதாரமே
- மதயானையைத் தோலாடை யாக்கினாய் மும்மலங்கள்
- போக்கி யுன்னடியார்க்குமே நற்கதியளித்திட்டாய்
- பிச்சாடனரா யருட்பிச்சையளித்தாய்
- கலியுக அவதாரம் செய்துதான் களிப்பதனைத் தந்து விட்டாய்
- ஆதிசேஷனுக்கும் வியாக்ரபாதருக்கும் தரிசனம் தந்தாய்
- ஆதி பார்வதி தேவிக்கு உன் மண ஒப்புதல் வரம் தந்தாய்
- சோதியாய்த் திருவண்ணாமலை தீபமாகி னாயுன்னருட்
- சுடரொளியில் எங்களைப் பணிந்திடப் பணித்திட்டாய்
- வலதூன்றியிட நடனமாடிக்களிப் பெய்தச் செய்தும்
- நற்காட்சி தந்தகமகிழ வைத்திட்டாய்
- சேந்தனார் தம்களியுண்டு களிப்பெய்தினாய்
- அசரீரியில் அடுத்தடுத்துப் பதிகம் பாடச்செய்தாய்
- திருத்தேர் அசைந்தாடிக் கண்டோர்மனம் ஊஞ்சலாடியுனை
- வந்தடைந்தோரின் சந்ததிகளைச் சாந்நித்ய மாக்கினாய்
- சத்ய தர்மசாந்தி பிரேமை அகிம்சையில்
- அறம் வளர்த்திட்டாயதில்
- நித்தியமாய், நிர்மலமாய், வாழ்வியலாக்கி, யுனதன்
- பாசியருளிட்டாய்
- சனாதன ஆன்மீக பாதையில் பீடு நடை போடவைத் தாயதில்
- அன்பு மதம் மொழியால் அனுபோகப் படுத்திவிட்டாய் சுவாமி
- திருவாதிரையில் ஆதிரையானுன் னருட்கருணை
- யனைவர்க்கும் கிட்டட்டும்
- பஞ்சாட்சர சிவனே உன் அருள்வெள்ளத்திலனைத்
- துயிர்களும் ஆனந்திக் கட்டும்
- நெஞ்சமதில் மஞ்சம் அமைத்தேயதிலு னைத் துஞ்ச வைக்கட்டும்
- சாயி சாயி சாயி என்று அங்கஅணுக்களிலுன்
- நாமம் எதிலுமெங்கும் எப்போதுமொலித்தே
- ஆத்மாவிலுறையட்டும், சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்