சிவராத்திரியில்
- மகாசிவராத்திரிப் பிரியனே லிங்கோத்பவனே
- பவசாகரத்தி னமுதனே சாயிலிங்கேஸ்வரனே
- அவதாரமாய் வந்த ஸ்ரீசத்ய சாயி சிவமே
- லீலா வினோதனே அபிஷேகப் பிரியனே அம்பல வாணனே
- அத்தனே – உன் ஐந்தெழுத்தைச்
- சொல்லத் தீவினைகளகலுமே துயர்யாவும் தீருமே
- பஞ்சாட்சர மந்திரத்தால் மும்மலங்களின் பிழைகளும்
- மாறுமே எதிர்வினைகளகலுமே ஏற்றம்தான் கிட்டுமே
- வேதாகமங்களின் வேள்வியனே உருத்திரப் பசுபதியே
- நந்திவாகனனுன் நர்த்தனங்கள் காணக்
- கண்கோடிதான் வேண்டுமே
- தும்பிக்கையோன் தந்தையே துணைவருவாயெந் தையே
- நம்பிக்கையாயுனைத் தொழுதாலுன் நமச்சிவாய
- மந்திரம்தான் காக்குமே இந்நானிலத்தை
- ஸ்ரீ சத்திய சாயி சிவமே சிவராத்திரி நன்னாளில் சிவசக்தி
- ஸ்வரூபனாய் வந்துன் அபயஹஸ்தத்தில்
- நல்லாசி அருளவேண்டும் ஸ்ரீ பர்தீஸ்வரா
- சாயீஸ்வரா பரமேஸ்வரா. சரணம் சரணம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்