சுந்தர சாயி முருகா
- கலாப மயில் அகவ அகமதனில் வந்துவிடு சாயி முருகா
- அகங்கள்தோறும் அகவல் பாடி முகமகிழ்வோம் சாயி முருகா
- சந்தங்கள், அந்தாதி, கவசம், பாசுரங்கள்
- பாயிரங்கள் பாடித் துதித்திடுவோம் சாயி முருகா
- சஷ்டி விரதமிருந்து இஷ்டமுடன் உனைத்
- தொழுதிடுவோம் சாயி முருகா
- வேல்மாறல் பாடியுந்தன் வேலைத் துதித்திடவே
- நீ வந்துவிடு சாயி முருகா
- கந்தர் சஷ்டி கவசம் கந்தர் அந்தாதி பாடிப் பாடியுனை
- வணங்கிடுவோம் சாயி முருகா
- சுந்தர சாயி யாகப் பிரசாந்தி சுப்பிரமணியனாக
- உன் பாதம் பணிந்திடுவோம் சாயி முருகா
- வள்ளி தெய்வயானை சமேதராய் வரம்
- தரவந்திடுவாய் சாயி முருகா
- தும்பிக்கையோனை நம்பிக்கை தரக்கூட்டியும்
- நீ வர வேண்டும் சாயி முருகா
- சண்முகநாதனாய் சரவணபவனாய் சங்கடங்கள்
- தீர்த்திடச் சடுதியில் வர வேண்டும் சாயி முருகா
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: