சுந்தர சாயி முருகா

  • கலாப மயில் அகவ அகமதனில் வந்துவிடு சாயி முருகா
  • அகங்கள்தோறும் அகவல் பாடி முகமகிழ்வோம் சாயி முருகா
  • சந்தங்கள், அந்தாதி, கவசம், பாசுரங்கள்
  • பாயிரங்கள் பாடித் துதித்திடுவோம் சாயி முருகா
  • சஷ்டி விரதமிருந்து இஷ்டமுடன் உனைத்
  • தொழுதிடுவோம் சாயி முருகா
  • வேல்மாறல் பாடியுந்தன் வேலைத் துதித்திடவே
  • நீ வந்துவிடு சாயி முருகா
  • கந்தர் சஷ்டி கவசம் கந்தர் அந்தாதி பாடிப் பாடியுனை
  • வணங்கிடுவோம் சாயி முருகா
  • சுந்தர சாயி யாகப் பிரசாந்தி சுப்பிரமணியனாக
  • உன் பாதம் பணிந்திடுவோம் சாயி முருகா
  • வள்ளி தெய்வயானை சமேதராய் வரம்
  • தரவந்திடுவாய் சாயி முருகா
  • தும்பிக்கையோனை நம்பிக்கை தரக்கூட்டியும்
  • நீ வர வேண்டும் சாயி முருகா
  • சண்முகநாதனாய் சரவணபவனாய் சங்கடங்கள்
  • தீர்த்திடச் சடுதியில் வர வேண்டும் சாயி முருகா

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0