எப்பெயரிலும் நீதான்
- தெய்வத் தமிழ் கூறும் நற்பண் பாக்களில்
- நற்றுணையாக நீ நிற்கிறாய் சாயீசா நமச்சிவாயமாய்
- தெய்வம் நீ என நம்பும் மனதில் மானசீகமாய்
- நீ தெரிகிறாய் சாயி நாராயணணாய்
- குன்றுதோறும் நின்று குவலயத்தைக் கருணையுடன்
- காக்கிறாய் பிரசாந்தி சாயி சுப்பிரமணியணாய்
- மேகங்களில் உன் அன்பைப் பொழிகிறாய்
- மழையாக ஸ்ரீ சாயி மகாவிஷ்ணுவாய்
- தீபங்களில் ஒளியாய் மிளிர்கிறாய் ஸ்ரீ சாயி மகாலட்சுமியாய்
- சக்தி பலம் தந்து காக்கின்றாய் ஸ்ரீ சாயி பார்வதிதேவியாய்
- கல்வி அறிவுக்கடாட்சம் தந்து மேதாவிலாசம்
- தருகிறாய் ஸ்ரீ சாயி கலைவாணியாய்
- எப்பெயரிட்டு அழைக்கினும் ஸ்ரீ சத்திய சாயி பரப்பிரும்மமாய்
- சாயி நீதான் வந்து அருள வேண்டும் தெய்வமே
- உன் பாத கமலங்களில் ஆனந்த வந்தனங்கள் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: