எப்பெயரிலும் நீதான்

  • தெய்வத் தமிழ் கூறும் நற்பண் பாக்களில்
  • நற்றுணையாக நீ நிற்கிறாய் சாயீசா நமச்சிவாயமாய்
  • தெய்வம் நீ என நம்பும் மனதில் மானசீகமாய்
  • நீ தெரிகிறாய் சாயி நாராயணணாய்
  • குன்றுதோறும் நின்று குவலயத்தைக் கருணையுடன்
  • காக்கிறாய் பிரசாந்தி சாயி சுப்பிரமணியணாய்
  • மேகங்களில் உன் அன்பைப் பொழிகிறாய்
  • மழையாக ஸ்ரீ சாயி மகாவிஷ்ணுவாய்
  • தீபங்களில் ஒளியாய் மிளிர்கிறாய் ஸ்ரீ சாயி மகாலட்சுமியாய்
  • சக்தி பலம் தந்து காக்கின்றாய் ஸ்ரீ சாயி பார்வதிதேவியாய்
  • கல்வி அறிவுக்கடாட்சம் தந்து மேதாவிலாசம்
  • தருகிறாய் ஸ்ரீ சாயி கலைவாணியாய்
  • எப்பெயரிட்டு அழைக்கினும் ஸ்ரீ சத்திய சாயி பரப்பிரும்மமாய்
  • சாயி நீதான் வந்து அருள வேண்டும் தெய்வமே
  • உன் பாத கமலங்களில் ஆனந்த வந்தனங்கள் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0