சுவாமியின் அவதார தினம்
- சுவாமி நீ அவதரித்த தருணமே இப்புவனத்திற்குப்
- புனித தர்மம்தான்
- மானச பஜரே குருசரணம் துஸ்தர பவ சாகர தரணம்.
- சுவாமி உன் முதல் பாடலுன்னா லெங்களுக்கும்
- குருபண்ணே
- ஒவ்வொரு பக்தருள்ளும் ஊடுருவியுள்ளது தான் இத் தருணம்
- ரத்னாகர வம்சத்திலவதரித்த நீ, ஸ்ரீ சத்திய சாயி அம்சமாய்
- உன் பக்தர்களை உருவாக்கிவிட்டாய் சுவாமி
- சாயி மதமன்பு மொழி உறையும் பன்மதப்பக்தருள்ளும்
- உன் அன்புதான் ஆள்கிறது சுவாமி
- அதற்குன்கருணைதான் துணைபுரிகிறது சுவாமி
- உனதன்புக் கருணையை உணர்ந்து அனுபவித்த
- பக்தர்களினெண்ணிக்கை கடல் போன்றது
- வானமும் பூமியும் மட்டும்தானுன் அன்பினெல்லை சுவாமி
- உனதவதாரகாலத்தி லுனையுணர்ந்து தெளிந்துனது
- பக்தராயிருப்பது எங்கள் வரம்தானே சுவாமி
- மனிதம் வளர்த்து மானுட சேவையிலாழ்த்தி
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அஹிம்சை, கல்வி, பக்தி,
- சமுதாயப் பணிகளில் ஈடுபடச் செய்து சனாதன தர்மத்தை
- நிலை நாட்டியதுன்னன்பும் கருணையும் தானே சுவாமி
- உன் ஆத்மார்த்த அத்யந்த பக்தராய் என்றுமுன்
- கீதைப் பாதையிலுன்கரம் பிடித்துன்வழி நடப்போம் சுவாமி
- மாதா பிதா குரு தெய்வமாயெங்களையுன்
- கருணையன்புவழி நடத்தி யருள்புரிவாய் சுவாமி
- உன் அவதாரம் பவதாரம் சந்ததிகள் காக்கும் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்