தங்கத்தேரில்

  • தங்கத் தேரில் பவனி வரும் பர்த்திவாசனைக் காணக்கண்கள்
  • கோடி வேண்டும்
  • இப்புவனமதி லுதித்து வந்த அவதாரமாய் எண்ணி எண்ணி
  • மகிழ வேண்டும்
  • சப்தபரிகள் பூட்டியதேர் ஏழு ஸ்வரங்களுக்கு மிணையாகும்
  • சப்த மாதாக் களாயருளுமுன் சாட்சியும் காட்சியுமது நிசமாகும்
  • தேர்வலம் வரும் ஊர்வலத்தில் நகர்வலமாய்ப்பக்தர்
  • உடன்வரவேண்டும்
  • கண்ணில் நீர்பெருக மனம் நெக்குருகச் சாயீசனின்
  • தங்கத் தேர்பவனியை ரசிக்க வேண்டும்
  • ஸ்ரீ ராமனாய்க் கண்ணனாய்த் தேர்வலத்தை
  • மனதில் பதிக்க வேண்டும்
  • ஊஞ்சலாடும் காட்சி கண்டுள்ளம் களித்து
  • உவகை கொள்ள வேண்டும்
  • தூய வெண்மை நிற அங்கியில் சத்தியத்தை
  • நினைக்கவேண்டும்
  • சனாதன சாரதியாய்ச் சுவாமியின் கீதைப்பாதை வழிநடந்து
  • சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைவழி
  • வாழ்வியல் வாழவேண்டும்
  • ஏக பரப்பிரம்மமுன் அன்பு அருள் கருணையில் முப்போதும்
  • உன் நாம ஸ்மரணையில் திளைக்கவேண்டும்
  • ஒவ்வொரு மூச்சிலும் உன் நாமம் உயிர்ப்பிக்க வேண்டும்
  • என்றும் துணையிருந்து அனைத்துயிர்களையும் காப்பாய்
  • ஸ்ரீ சத்திய சாயீசா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0