தியானத் தபோவனம்

  • அன்பு அமைதி ஆனந்தம் கிட்டும் இடம், தலம், தவம்
  • தரு, தெய்வீகம்
  • இலக்கியச் சரித்திரம் சொல்லும் வட விருட்சம் என்று நீ
  • விளக்கிய மகத்துவம் கூறும் உன் தல விருட்ச நாள் இன்று
  • கிளைகள் வேரூன்றி விருட்சம் வளரும் உன் பக்தர்கள்
  • கூறும் ‘சாய்ராமில்’ உன்னருட்கடாட்சம் மலரும்
  • பிரளயத்தில் ஆலிலையில் விஷ்ணுவாய் அதனில்
  • சிவமாயும் நீ சுவாமி
  • பால சாயி பிராயத்தில் மகிமை, லீலைகளை,
  • அற்புதமாக்கியதும் நீ சுவாமி
  • எண்ணிலடங்கா லீலைகள் உன் வண்ணமது திண்ணம்
  • பிரயாகையின் அட்சய வடம் திரிவேணி வட விருட்சத்தின்
  • காட்சியும், சாட்சியுமாயும், நீ சுவாமி
  • பிரசாந்தித் தபோவனத்தில், தல விருட்சம் யந்திரப் பிரதிஷ்டை
  • செய்த நாளுமிது சுவாமி
  • ரிஷிகேஷில் பிரம்ம, விஷ்ணு, சிவத்தலத் தருவாயும்
  • நீதானே சுவாமி
  • அறிவிற்கடங்கா ஆச்சரியமுன் ஆகர்சனம்
  • அறிவியலுமறி யாதுன் ஆத்ம நிதர்சனம்
  • அறத்துடனான அன்பொன்றே உன் னழகு தரிசனம்
  • மறவாது சாயி தெய்வமே உன் ஸ்பரிசனம்
  • பகவானின் நயனம் ஸ்பரிசம் சம்பாஷணம், பொக்கிஷமே
  • முனிவர்களும் தபஸ்விகளும் தானே இங்கு வருவரென
  • உரைத்திட்டாய் சுவாமி
  • ‘பெத்தபொட்டம்மா’வின் தவ இடமும் இதுதானே
  • இஷ்டமாய், சுவாமி
  • தேவர்கள், ரிஷிகள் வருகை, வரிசையைக் கண்டுன்னைப்
  • புரிந்தது மிங்குதானே சுவாமி
  • சாயி பக்தர்களுக்கும் தவத்தலமாய்த் தயை செய்து
  • வருவதுமித் தபோவனம் தானே !
  • ஆல விருட்சம் தழைத்தது போலுன் பக்தர்களுன்
  • சாந்நித்யத்தில் இங்கு திளைக்கிறோம்
  • ஆலமுண்ட உன் சிவ ரூபமிங்கு காண்கிறோம்
  • ஆடலரசன் தில்லை நாயகனாய் உன்னைத் தரிசிக்கிறோம்
  • ஆத்ம தரிசனத்திலுன் அன்புக் கருணை மழையில்
  • நனைகிறோம்
  • மங்கல வாத்தியம் முழங்க மந்திர ஒலி பரவ நீ பிரதிஷ்டை
  • செய்வித்த மகத்துவ நாளின்று
  • திங்கள் சூடிய சிவமே உன்திருக் கரத்தாலி0த்
  • தபோவனம் உதயம் இன்று
  • புத்தருக்கு கயை ஆலமரத்தில் கிட்டியது ஆத்ம ஞானம்
  • உன் பக்தருக்குன் தயை, இத்தரு, நிழலிலுன் ஆத்ம வேதம்
  • ‘பெத்தபொட்டம்மா’வின் ஆத்மார்த்த தவத்தலம் மரமிதுவரம்
  • உன் அவதார மகிமையில் உன்னதம் இதுவும்
  • தன் மனம் அடங்கிடத் தன்மையளிக்கும் தவக்குடிலே இதுவும்
  • என் சங்கல்பம், உற்சாகம், ஆனந்தம் சனாதன சாரதி
  • என்பாய் உன் சாத்வீகம், சாந்நித்யம், சாஸ்வதம்
  • கூறும் சதாதினச் சாரதிதான் இதுவும் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0