தேவி வருகிறாள்
- தேவி வருகிறாள் நம்மைத் தேடி வருகிறாள்
- தேவதேவியாக வந்து நாடி வருகிறாள்
- தேவராகம் பாடி நம்மைப் பாட வைக்கிறாள்
- தேவகானம் கேட்கச் செய்தே இனிமை தருகிறாள்
- கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றுரைக்கிறாள்
- கோடி சென்மம் பிறந்து வாழ்ந்தாலும் கூடிக்களித்து
- வாழ்வாங்கு வாழச் சொல்கிறாள்
- ஓடியோடிப் பர்த்தி சேவை செய்திட வரமளிக்கிறாள்
- நாடி வரும் நன்மைகளெல்லாம் நாராயண
- சேவையிலென்கிறாள்
- மக்கள் சேவையே மகேசன் சேவையென் றுணரச் செய்கிறாள்
- மாக்களான மனதினிலும் மனிதம் மலரச் செய்கிறாள்
- பாக்களாகப் பண்பாடித் துதிக்கச்செய்கிறாள்
- மலர்ப் பூக்களினால் பூஜைசெய்து, மாலைசூட்டி அர்ச்சித்து
- மகிழவைக்கிறாள்
- சுயநலமில்லாத அன்பால் வாழ்வியல் வாழவழி வகுக்கிறாள்
- அன்பால் நாளைத் தொடங்கி அன்பால் முடிக்கச் சொல்கிறாள்
- மாதா பிதா குரு தெய்வச்சகாவாகி
- நம்முடனிணைந்து வாழ்கிறாள்
- நாமஸ்மரணையில் நாள்தோறும்
- நற்பவி மட்டும் அருள்கிறாள்
- நகர சங்கீர்த்தனத்தில் மகரஜோதியாய்க்
- கண்ணில் தெரிகிறாள்.
- நாம் காணுமிடமெலாம் காட்சியாய் தெரிந்து சாட்சியாகிறாள்
- மாட்சி தந்து மீட்சியளித்துப் பிறவிப்பெருங்கடல்
- நீந்த வைக்கிறாள்
- ஸ்ரீசத்ய சாயி சிவசக்தி ஸ்வரூபிணிதேவியெனும்
- பெயருடையாள், உன் மலரடி சரணம் சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்