தேவி வருகிறாள்

  • தேவி வருகிறாள் நம்மைத் தேடி வருகிறாள்
  • தேவதேவியாக வந்து நாடி வருகிறாள்
  • தேவராகம் பாடி நம்மைப் பாட வைக்கிறாள்
  • தேவகானம் கேட்கச் செய்தே இனிமை தருகிறாள்
  • கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றுரைக்கிறாள்
  • கோடி சென்மம் பிறந்து வாழ்ந்தாலும் கூடிக்களித்து
  • வாழ்வாங்கு வாழச் சொல்கிறாள்
  • ஓடியோடிப் பர்த்தி சேவை செய்திட வரமளிக்கிறாள்
  • நாடி வரும் நன்மைகளெல்லாம் நாராயண
  • சேவையிலென்கிறாள்
  • மக்கள் சேவையே மகேசன் சேவையென் றுணரச் செய்கிறாள்
  • மாக்களான மனதினிலும் மனிதம் மலரச் செய்கிறாள்
  • பாக்களாகப் பண்பாடித் துதிக்கச்செய்கிறாள்
  • மலர்ப் பூக்களினால் பூஜைசெய்து, மாலைசூட்டி அர்ச்சித்து
  • மகிழவைக்கிறாள்
  • சுயநலமில்லாத அன்பால் வாழ்வியல் வாழவழி வகுக்கிறாள்
  • அன்பால் நாளைத் தொடங்கி அன்பால் முடிக்கச் சொல்கிறாள்
  • மாதா பிதா குரு தெய்வச்சகாவாகி
  • நம்முடனிணைந்து வாழ்கிறாள்
  • நாமஸ்மரணையில் நாள்தோறும்
  • நற்பவி மட்டும் அருள்கிறாள்
  • நகர சங்கீர்த்தனத்தில் மகரஜோதியாய்க்
  • கண்ணில் தெரிகிறாள்.
  • நாம் காணுமிடமெலாம் காட்சியாய் தெரிந்து சாட்சியாகிறாள்
  • மாட்சி தந்து மீட்சியளித்துப் பிறவிப்பெருங்கடல்
  • நீந்த வைக்கிறாள்
  • ஸ்ரீசத்ய சாயி சிவசக்தி ஸ்வரூபிணிதேவியெனும்
  • பெயருடையாள், உன் மலரடி சரணம் சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0