பிரசாந்தி பாலசுப்பிரமணியம்
- மயிலேறி வருவானந்த முருகன் மலைக்
- குன்றுதோறும் நின்றருள் தருவானந்தக் கந்தன்
- மனதோடு பேசி மகிழ்விப்பானந்தக் குமரன்
- ஒவ்வொரு பக்தியிலும் பக்தருள்ளும்
- பரிமளிப்பானந்த வேலன்
- மடிமீது குழந்தைபோல் தவழ்வானவன்
- மருள்நீக்கி, யிருள் போக்கித் தருவானந்தச் சேந்தன்
- படிகளேறித் தொழுதாலவன் பாங்காயருள் தருவான்
- இடிமின்னலாயிடர்வரினும் வாழ்வி லிதமாய்
- இன்னல்களைந், தினிமையே, தருவானந்த மால்மருகன்
- ஆறுபடைவீடுகளில் அர்ச்சனம் ஆயிரம் பெயர்களிலே
- பர்த்தியில் ஸ்பர்சனம், தரிசனம், சம்பாஷனம்,
- கோடான கோடிப் பேர்களில்
- ஆயிரம் நாமங்களில், சாயி முருகனாய்ப் பிரசாந்தி
- சுப்பிரமணியசுவாமி, யாயந்த ஸ்ரீ சத்யசாயி சரவணபவ
- தேவசேனாபதியைத் தொழுது மலரடி பணிவோம்
- சரணம் சரணம் சாயி சண்முக சன்மதனே போற்றி போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்