பொன்மாரி பொழிந்தவள்
- ஸ்ரீ சாயி மகாலட்சுமி தேவியே
- ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்பிலுறைபவளே
- ஸ்ரீதேவி நீ பொன் மாரி பொழிகின்ற கனகதாரை
- எங்கள் சத்யசாயி தேவியே
- ஸ்ரீ மகளே, பொன்மகளே, ஸ்ரீ சத்யசாயிமாதேவித் தாயாரே
- ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபிணியாய், முத்தேவியருள் நீயுமே
- அருளாட்சியே புரிகின்றாயம்மா
- கலைமகள், மலைமகள், உடனுறை அலைமகளாம்
- அலங்கார நாயகியே
- ஸ்ரீ சாயிதேவி சாயிமாவெனும், நாமம் தரித்தவளே
- கொலுவில் வீற்றிருந்து எங்கள் குலம் காத்து அருள்வாயே
- முத்தேவியராய்க் கொலுப்படியில் நின்றிருந்து
- இந்நவராத்திரியில் நல்வரம் அருள்வித்தே
- தரிசனம்தான் தருவாயே
- வானும் மண்ணும் எல்லையாகப் பாரினிலெங்கும்
- இயற்கையாய் அழகுருவாய்க் காட்சி தருபவளே
- பர்த்தித்தலக் கருவறைத் தெய்வமாய்க் கொலுவிருக்கும்
- ஸ்ரீ சத்ய சாயி மகாலட்சுமித்தாயே
- உன் பொற்பாத கமலங்களுக்கு ஆனந்த
- அனந்த கோடி நமஸ்காரமம்மா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்