ஆழித்தேரழகு
- சுந்தர பாதம் சுகம்தரும் பாதம்
- இடர் நீக்கிச் சுடர்தரும் சுகந்த பாதம்
- எதிர்வரும் துன்பம் தீர்த்து புதிராகப்
- புனர்வாழ்வளித்திடும் புனிதப் பாதம்
- நினைத்தாலே தானாய்த் தானே தேடிவரும் பாதம்
- மனதில் நினைத்தால் உடன் வந்து தேனாய்
- நலம்தரும் தாயுமானப்பாதம்
- சினம் தவிர்த்து குணத்தால் அன்புடன்
- வாழச் சொல்லும் அழகுப் பாதம்
- பிரேம மயமாய் மக்கள் சேவையாற்றிடச் சொல்லும்
- சாயீசன் பாதம்
- ஓரடி எடுத்து வைக்க எண்ணிலடங்கா அடிகள்
- எடுத்தோடி வரும் ஓம்காரப் பாதம்
- நாடிவந்து நற்பவிமட்டு மளித்திடும் நற்கதிப் பாதம்
- தேடி வரும் அடியார்க்குத் தேவை அறிந்து
- தயை செய்யும் தார்மீகப் பாதம்
- ஆடிவரும் ஆழித்தேரழகு போல் பஜன் பாடுகையில்
- நடந்துவரும் நம் சுவாமியின் பங்கயப் பாதம்
- கூடி வரும் கூட்டத்தைத் தெய்வீகக் குரலால்
- கானம் பாடி மயக்கும் சுவாமியின் சுகந்தப்பாதம்
- பாடி வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கண்டுகளித்து
- மகிழும் சுவாமியின் சுகிர்த சுகுணப்பாதம்
- காணக் கண் கோடிவேண்டும் வேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயிநாதனுக்குச் சுபமங்களம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்