முழு நிலவாய்
- செவ்வக வடிவ நீள்முற்றம்
- அண்ணாந்து மேலே பார்க்க முழுநிலவாய் முற்றும் முற்றம்
- வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின்
- குளுமையாய்ப் புன்முறுவ லுனதாய் நம் சுவாமி
- செவ்வங்கிதனில் தங்கம்நிறத் ‘தங்கமே’
- வென்றழைத்திடும் நம் சுவாமி
- செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம்
- செந்தாமரைப்பாதம் நினைக்கச் சிந்தூரமாய்ச் சுந்தரப் பாதம்
- பந்தமாய்ப் பார்க்கும் பிரேமைப் பார்வையில்
- பாந்தமாய்த் தெரியும் பாசமான போர்வையில்
- எங்கள் சொந்தம் நீ மட்டும் தானென்று
- நினைத்திடும் கோர்வையில்
- பரப்பிரும்மம் உன்னில் தீர்வாய்ச் சேர்கையிலது பிரசாந்தியில்
- கார்முகில்களின் நகரும் மேகக்கூட்டத்தில் கண்சிமிட்டும்
- நட்சத்திரக்கூட்டங்களில்
- கார்முகில் வண்ணக் கண்ணனைக்காண
- எண்ணமெழுகையில் நீலமேகச் சியாமளனாய்
- நித்திலமாய் வேணுகான மிசைத்திட
- வேய்ங்குழலூதி நீ வந்தாயே சத்ய சாயி கிருஷ்ணணாய்
- வேல்கொண்ட கையில் மயில் வாகனத்திலேறி
- மயூரனாய் வில்லேந்திய கரத்துடன் சீதா சமேத
- இலக்குமணனன் சகித அனுமனுடனான
- அழகுக்கோலத்தில் ஸ்ரீ சாயிராமனாய்
- சங்கு சக்ரமேந்தி ஸ்ரீதேவி பூதேவியுடனாய்க்
- கருடவாகனத்தில் மகாவிஷ்ணுவாய்
- லிங்கோத்பவனாய்க் கயிலைக்காட்சியில்
- ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூப ஸ்ரீ சாயீஸ்வரனாய்
- வீணாவாணி கலைவாணியாய், பிரம்ம பத்தினியாய்
- வெண்தாமரையில் வீற்றிருப்பவளாய்
- முத்தேவியராய் முத்தமிழாய், அலை, கலை, மலை,
- கல்வி, செல்வ, வீர, சனாதனியாய்
- தேவிசண்டிகையாய் ஆதிசக்தி சப்தமாதாக்களாய்ப்
- பஞ்சபூதங்களாய் அகிலமனைத்தும்
- ஆட்சி செய்விக்கும் சாயிஅன்னையாய்
- எப்படி நினைக்கினும் பாபா உனை நினைப்பவர்க்கு
- நினைத்தபோது நினைத்தவாறு காட்சி தருவாய்
- கற்பனையிலும், கனவு நனவிலும், காட்சி மீட்சி மாட்சியினில்
- சுவாமியுனை முப்போது மெப்போது மிப்போதும்
- நினைத்திட வரமருள்வாய் சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்