முழு நிலவாய்

  • செவ்வக வடிவ நீள்முற்றம்
  • அண்ணாந்து மேலே பார்க்க முழுநிலவாய் முற்றும் முற்றம்
  • வெண்நிற வெண்ணிலா வெட்டவெளி செவ்விளநீரின்
  • குளுமையாய்ப் புன்முறுவ லுனதாய் நம் சுவாமி
  • செவ்வங்கிதனில் தங்கம்நிறத் ‘தங்கமே’
  • வென்றழைத்திடும் நம் சுவாமி
  • செண்பக மணத்துடன் தென்பொதிகைத் தென்றல் சுகந்தம்
  • செந்தாமரைப்பாதம் நினைக்கச் சிந்தூரமாய்ச் சுந்தரப் பாதம்
  • பந்தமாய்ப் பார்க்கும் பிரேமைப் பார்வையில்
  • பாந்தமாய்த் தெரியும் பாசமான போர்வையில்
  • எங்கள் சொந்தம் நீ மட்டும் தானென்று
  • நினைத்திடும் கோர்வையில்
  • பரப்பிரும்மம் உன்னில் தீர்வாய்ச் சேர்கையிலது பிரசாந்தியில்
  • கார்முகில்களின் நகரும் மேகக்கூட்டத்தில் கண்சிமிட்டும்
  • நட்சத்திரக்கூட்டங்களில்
  • கார்முகில் வண்ணக் கண்ணனைக்காண
  • எண்ணமெழுகையில் நீலமேகச் சியாமளனாய்
  • நித்திலமாய் வேணுகான மிசைத்திட
  • வேய்ங்குழலூதி நீ வந்தாயே சத்ய சாயி கிருஷ்ணணாய்
  • வேல்கொண்ட கையில் மயில் வாகனத்திலேறி
  • மயூரனாய் வில்லேந்திய கரத்துடன் சீதா சமேத
  • இலக்குமணனன் சகித அனுமனுடனான
  • அழகுக்கோலத்தில் ஸ்ரீ சாயிராமனாய்
  • சங்கு சக்ரமேந்தி ஸ்ரீதேவி பூதேவியுடனாய்க்
  • கருடவாகனத்தில் மகாவிஷ்ணுவாய்
  • லிங்கோத்பவனாய்க் கயிலைக்காட்சியில்
  • ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூப ஸ்ரீ சாயீஸ்வரனாய்
  • வீணாவாணி கலைவாணியாய், பிரம்ம பத்தினியாய்
  • வெண்தாமரையில் வீற்றிருப்பவளாய்
  • முத்தேவியராய் முத்தமிழாய், அலை, கலை, மலை,
  • கல்வி, செல்வ, வீர, சனாதனியாய்
  • தேவிசண்டிகையாய் ஆதிசக்தி சப்தமாதாக்களாய்ப்
  • பஞ்சபூதங்களாய் அகிலமனைத்தும்
  • ஆட்சி செய்விக்கும் சாயிஅன்னையாய்
  • எப்படி நினைக்கினும் பாபா உனை நினைப்பவர்க்கு
  • நினைத்தபோது நினைத்தவாறு காட்சி தருவாய்
  • கற்பனையிலும், கனவு நனவிலும், காட்சி மீட்சி மாட்சியினில்
  • சுவாமியுனை முப்போது மெப்போது மிப்போதும்
  • நினைத்திட வரமருள்வாய் சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0