புத்தம் புது உதயம்

 • ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம்
 • சாயிநாதா உன் மகிமைப் பிரதாபங்க ளளிக்கும்
 • நித்தம்தான் சுகந்தம்
 • வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், ஏரி, கிணறு,
 • நிலமனைத்துமே இயற்கையாயுந்தன் பிரபாவம்
 • பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும்
 • பாயும் பிரவாகம்
 • எண்ணிலடங்கா அற்புதங்கள் ஆயிரமாயிரம் பல நூறாயிரம்
 • சொல்லிலடங்கா வுன்புகழ்பாடப் பண்கள்
 • பல்லாயிரங் கோடிகள்
 • கூடி வரும் யோகம் தன்னாலதுன்னால்
 • வரும் பக்தியின் யாகம்
 • உன் சத்தியப்பாதையில் வரும் நல்வாழ்வியல் போகம்
 • உன்சங்கல்பமில்லாவிடில் வந்த வழி
 • தானாய்த் தனித்து அதுபோகும்
 • உன் அவதாரம் முழுதும் அகிலத்தில் நற்பவி நல்கிய பவதாரம்
 • பரப்பிரும்மம் நீ தானே ஆத்மார்த்தமாய் எங்களின் ஆதாரம்
 • உன் பாதார விந்தம் பந்தமதுபாந்தம் எங்களின் சொந்தம்
 • நிந்தித் தோர்க்கும் அனுக்கிரக மளித்திடுமே உன்
 • விந்தையான விந்தம் தரும் சுகந்தம் சுவாமி

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0