வெள்ளிக்கிழமைதனில்

  • சாயி மகமாயி என்று உன்னைத் துதிப்போம்
  • நீ மாயி மகமாயியாக அகம்முழுக்க நிறைந்திருப்பாய்
  • தாயும் நீ தந்தையும் நீ தயை செய்யும் தயாபரி நீ
  • சேயுமாய்க் காத்து நிற்பாயுன் சேவடியில் பணிய வைப்பாய்
  • பஞ்சபூதங்களில் பஞ்சாட்சரி சக்தியும் நீ
  • உன்னைத் தஞ்சமென்று வந்தவருக்குப் பஞ்சமின்றிக்
  • கருணை செய்வாய் நீ.
  • கொஞ்சங்கூட மிச்சமின்றித் துயர் களைந்து இன்பம் தந்து
  • மஞ்சம்மாயுன் மடிதனில் துஞ்சவைத்துத் துயில வைப்பாய் நீ.
  • வெள்ளிக்கிழமைதனில் மங்களநாயகி, மஞ்சுளபாஷினி,
  • மங்கள கௌரி, சாயீஸ்வரித் தாயே – நீ
  • சாதகமாய் சாஸ்வதமாய்ச், சாந்நித்தியமாயுனை
  • நாடி வந்தோர்க்குத்தருவாயே நல்லருளே
  • நானிலத்தில் மனிதருள் மனிதம் தந்து காப்பாயே
  • உன் சரணாகதியே சங்கமம் சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0