வெள்ளிக்கிழமைதனில்
- சாயி மகமாயி என்று உன்னைத் துதிப்போம்
- நீ மாயி மகமாயியாக அகம்முழுக்க நிறைந்திருப்பாய்
- தாயும் நீ தந்தையும் நீ தயை செய்யும் தயாபரி நீ
- சேயுமாய்க் காத்து நிற்பாயுன் சேவடியில் பணிய வைப்பாய்
- பஞ்சபூதங்களில் பஞ்சாட்சரி சக்தியும் நீ
- உன்னைத் தஞ்சமென்று வந்தவருக்குப் பஞ்சமின்றிக்
- கருணை செய்வாய் நீ.
- கொஞ்சங்கூட மிச்சமின்றித் துயர் களைந்து இன்பம் தந்து
- மஞ்சம்மாயுன் மடிதனில் துஞ்சவைத்துத் துயில வைப்பாய் நீ.
- வெள்ளிக்கிழமைதனில் மங்களநாயகி, மஞ்சுளபாஷினி,
- மங்கள கௌரி, சாயீஸ்வரித் தாயே – நீ
- சாதகமாய் சாஸ்வதமாய்ச், சாந்நித்தியமாயுனை
- நாடி வந்தோர்க்குத்தருவாயே நல்லருளே
- நானிலத்தில் மனிதருள் மனிதம் தந்து காப்பாயே
- உன் சரணாகதியே சங்கமம் சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்