கிரிவலம் வரலாம்
- சீரடியில் உன் சீரடியைஎடுத்து வைத்துச் சத்சரிதமாக்கினாய்
- பர்த்தியில் பரமன் நீ அவதரித்துத் தபோவனமாக்கினாய்
- கிரிவலம் ஓரடி சுற்ற, ஒரு யாகம் செய்த பலன் உண்டாம்
- ஈரடி வலம்வர, ராஜசூயயாகம் பெற்றபலனாம்
- மூன்றடி எடுத்து வைக்க, அஸ்வ மேத யாகம் செய்த
- பலனென்பர் சித்தர் பெருமக்கள்
- பர்த்தியில் சர்வமத சம்மதமாய்ப் பன்மதப் பக்தருக்கும்
- அவரவர் தெய்வமாய்க்காட்சி தந்து கருணை செய்யும்
- அன்பு சத்யசாயி தெய்வமுன் சேவடிகள் போற்றி
- மலரடிகள் துதித்துன், பங்கயப்பதமலர் தொழுதிருக்கப்பிறவி
- முழுதும் அன்பிலழகாய் வலம் வரலாம்
- பிறவி இருப்பின் அதிலும் நலம், வளம் பெறலாம்
- உனது அன்பு மதத்தில் அடைக்கலமும் ஆகலாம்
- சாய்ராம் நாமம் சொல்லிக் கலி சேர்ந்து வெல்லலாம்,
- சேர்ந்திடாமல் களிப்பெய்தலாம்,
- கடைத்தேறலாம், பிரசாந்தி வலம் வரலாம்.
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையில்,
- சனாதன தர்ம வாழ்வு வாழலாம்
- ஸ்ரீசத்ய சாயி நாத தெய்வமே உனக்கு ஆத்ம வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்