சாயி குருவாய்
- தேவ குரு, ஞான குரு, பிரம்ம குரு, விஷ்ணு குரு,
- சிவ குரு, சக்தி குரு, சத்ய குரு, சாயி குரு,
- எவ்வடிவிலு முனைக்கண்டால் ஆனந்தமே
- துதித்தால் பேரானந்தமே, வந்தனை செய்தால் பரமானந்தமே
- உன்னடி தொழுதால் ஆத்மானந்தமே
- வியாபகமே, விக்னவிநாயகனே, வியப்பே, வித்தகமே,
- வித்தகனே, விரிசடைத் தத்துவமே,
- ஸ்ரீ சத்ய சாயித்துவமே, சத்துவமே, சமத்துவமே,
- சத்தியமே, சரித்திரமே, சாகித்யமே, சாயுஜ்யமே
- சாந்நித்யமே, சகலமே, சர்வமே, சமத்துவமே,
- நீமட்டும் தானெங்களின் மொத்தமே, சொந்தமே
- பன்மதப் பக்தர்களின் சமதத்துவமே அன்பு
- மட்டும்தானுன் மதம்
- நிதமதிலே வாழ்ந்தே உன்னருட் கொடை
- மழையினில் நனைந்தே
- உன் அத்துனைப் புனிதச் சேவைகளும் செய்திடவே
- அருந்தவமாம் இவ்வையத் துயிர்கள் இனிதே
- வளமுடன் வாழவே, மனிதம் வளர்ந்திடப்
- பக்தி சனாதனம் பெருகிடச் சாத்வீகம் மலர்ந்திட
- பக்தி உயர்ந்திடச் சத்சங்கங்கள் உருவாகித்
- தர்மம் தழைத்திட நீ துணை வந்தருள வேண்டும்
- உற்றதுணையாய், உடன் உள்ளில், உயிரில், இருக்கவேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயி குரு தெய்வமே சாயி சிவமே,
- சாயித்தத்தாத்ரேயரே, உன் திருவடி சரணம் சரணம்.