அதிசயப் பூதான்

  • குறிஞ்சி மலர் போல் அதிசயப்பூதான் நீ
  • அற்புதங்களாற்றுவதில் சாயி முருகா
  • குன்றுதோறும் குடியிருக்கும் குமார
  • சண்முக வடிவேலா சாயி முருகா
  • முல்லைப்பூ மாலை சூடி உன்னைத்தொழுதால்
  • காடும் சார்ந்த கானகமதில் உன்
  • பக்திப்பூக்களுன் அருள் சொரியும்
  • முக்திப் பாக்களைப் பரப்பும், மருத புன்னை மர நிழல்போல்,
  • குளிர்விப்பாயுன் பக்தர்களை நல்லாசி தந்தே தான்
  • வைகறைப்போதின் பூபாளம் போலுன்பஜன்பாக்கள்
  • ராகமிசைத்திடும்
  • நெய்தல் நிலத்திலுமுன் கருணைக் கொடை தானாய்த்
  • தேடி வந்துன்னருளன்பைத் தரும்
  • பாலை நிலம் கூட உன் கரிசன அக்கறையில்
  • சோலைவனமாகிவிடும்
  • உன் தரிசனம் கிட்டிவிட்டாலது உன் அதிசய அற்புதந்தான்
  • குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐவகை
  • நிலங்களிலும் பல்வகை லீலா வினோதங்கள் புரிந்து
  • தானதிசயித்து பிரமிக்க வைக்கிறாய் சுவாமி
  • ஐங்கரன்தந்தையாய்ப் பஞ்சமுகனாய்ப்
  • பாதிஉமைப்பதியாயெப்பெயரில் அழைத்தாலும் பரப்பிரும்மமாய்
  • ஏற்றம் தரவே வந்திடுவாய் ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே
  • உனக்கு ஆத்ம வந்தனம் சுவாமி சரணம் போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0