தெய்வ தண்டனை

Sairam! This is available only in Tamil*

  • சாயி உன் சொல்லையே
  • பிரபஞ்சம் குறித்துக் கொள்கிறது
  • அதை நிறைவேற்றவே
  • வானமும்
  • வானவில்லாய்
  • வளைந்து செல்கிறது
  • நட்சத்திரங்கள் உன்
  • கண்கள் எனப் புகழத் தோன்றுகிறது
  • ஆனால் சுவாமி
  • விதைகளும் உன் கண்களே
  • கண்ணுக்குத் தெரிந்தவைகளைத் தான்
  • மனிதன் பார்க்கிறான்
  • கண்ணுக்குத் தெரியாதவைகளோ
  • மனிதனையேப் பார்த்துக் கொண்டிருக்கிறது
  • சுவாமி நீ புரிய முடியாத
  • ஆற்றல் என்பது ஏதுமில்லை
  • சுவாமி உன்னைப் புரிய முடியாமல்
  • சரணாகதி அடையும் போதே
  • மனித ஆற்றலும் போற்றலாய்
  • அவனிடமே திரும்பி வருகிறது
  • பூக்களை ஏன் மனிதன்
  • புரிந்து கொள்ள வேண்டும்?
  • பூக்களை ரசித்தால் போதும்
  • செடியில் பூக்கும் போதே
  • உனக்கான பூஜையை அது
  • செய்து விடுகிறது
  • மனிதன் மட்டுமே
  • பிறந்த பிறகும்
  • பூக்கள் பூக்கும் வரை
  • பூஜையைத் தள்ளி வைக்கிறான்
  • எத்தனைக் கண்கள் உனக்கு!
  • எல்லா நேரமும்
  • எல்லோரையும்
  • கவனித்துக் கொண்டே இருக்கிறாயே
  • சுவாமி உனக்கு
  • அலுப்பதே இல்லையா!
  • எத்தனை பக்தர்கள் உனக்கு!
  • எல்லோரையும் உன்
  • கரம் தூக்கி
  • காப்பாற்றிக் கொண்டே இருக்கிறாயே
  • சுவாமி உன்
  • கைகள் வலிக்கவே வலிக்காதா!
  • மர விசிறிகளை
  • மனிதன் வெட்டித் தீர்த்த பின்
  • மின்விசிறியை நிறுத்தினால்
  • காற்று கூட நின்றுவிடுகிறதே
  • சுவாமி நீ மட்டும்
  • உன் மின்சாரத்தை
  • எங்கிருந்து தயாரிக்கிறாய்?
  • காசு இல்லாதவர்களை
  • மாசு எனப் பார்க்கிறதே
  • மனம்
  • நீ மட்டும் எப்படி
  • கருணையோடு பார்க்கிறாய்!
  • சுவாமி எப்படி
  • நல்லவர்களுக்கும்
  • நய வஞ்சகர்களுக்கும்
  • ஒரேவிதமான சுவாசத்தை ஓடவிடுகிறாய்?
  • உன் அகராதியில்
  • குற்றங்கள் என்ற பக்கங்களே இல்லையே
  • இருந்திருந்தால்
  • என் பெயரை அல்லவா முதலில்
  • எழுதி இருப்பாய்
  • எப்படி சுவாமி நீ
  • இப்படி இரக்கங் காட்டுகிறாய்!
  • நீ கடவுள் இல்லை என்றால்
  • வேறு யார் கடவுளாக இருக்க முடியும்!
  • மனிதர்கள் இவர்கள்
  • வழிபடும் கடவுளருக்கும்
  • நீதானே சுவாமி
  • கடவுளாக இருக்கிறாய்!
  • எல்லா தவறுகளுக்கும்
  • இவர்கள் தண்டனை வைத்திருக்கிறார்கள்
  • அதில்
  • குறைந்த பட்ச தண்டனை வெறுப்பு
  • அதிக பட்ச தண்டனை நிந்தனை
  • சுவாமி உன் நீதிமன்றத்தில்
  • நீதி தேவதை சிறகோடு நிற்கிறாள்
  • கையில் தராசில்லை
  • இதயத்தையே ஏந்திக் கொண்டிருக்கிறாள்
  • எல்லாக் குற்றங்களுக்கும்
  • சுவாமி நீ தரும் ஒரே தண்டனை
  • பேரன்பே
  • அந்த தண்டனையே
  • என்னையும்
  • மனிதனாக மாற்றிக் கொண்டிருக்கிறது!
  • கவிஞர் வைரபாரதி
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0