நரனை தேடியே வந்திட்ட நாரணன்
Sairam! This is available only in Tamil*
- காணாது உன்னை
- களைத்தே இருந்திட்டேன்
- நீயே வராததால்
- நானே தேடிவந்துள்ளேன் உன்னிடம்
- பக்குவமாய் அறிவுதந்து
- மானிடராய் முதலிடத்தில்
- நல்ல மனத்தினையும் அளித்திட்டேன்
- பொல்லாத உலகினில் வாழ்ந்திட
- நில்லாது மாறுகின்ற
- எண்ணமதை
- மனத்திலே புகுத்தி
- மாய உலகின்
- பொய்மை தோற்றத்தில்
- மனமுவந்து மூழ்கியே
- சத்தான பரம்பொருளானயென்னை
- மதிகெட்டு மறந்திட்டாய்
- வினைகளில் கட்டுண்டு
- விளையாடிய வீபரீதத்தால்
- மீளவே முடியாது
- மீண்டும் பல பிறவிகண்டாய்
- தர்மத்தின்வடிவெடுத்து
- அதர்மத்திலிருந்து மீட்டிட
- அறத்தினை உபதேசிக்க
- மறக்காது தானாகவே வந்துள்ளேன் தரணிதனில்
- சத்தியமே என் வாழ்க்கை
- சேவைப் பணியே என்
- சுவாசம் ஆகும்
- நல்லுரையே உடலாகும்
- உன் மகிழ்ச்சியே
- என் உணவாகும்
- மெய்தனை அறிந்து
- பொய்மையெனும் உடல் பற்றறுத்து
- பரவசமொடு என்னிடம் சேர்ந்திட
- பரமேயான சத்தியன்
- அழைக்கின்றேன்
- நரனே நாரணனே
- நேரினில் வந்துள்ளதை
- முரண்படாது ஏற்று
- முன்னேற்றம் காணவே
- முன் வருவாய்
- மன்னவன் சாயியை நோக்கி
- காலமெல்லாம் உனக்காகவே
- காத்திருக்கும் காப்பாளன்
- சத்தியமான சாயியிடம்
- வந்திடுவாய் மானவனே
- உன் குணம் செயல் பாராது
- உன்னை தட்டாது ஏற்பேன்
- முன்னால் வா
- முந்தியேவா
- முதலில் வா
- முத்திதனைப் பெற்று
- முத்திரை பதித்திடவா
- சத்தியன் உனக்கேயென காத்திருப்பான் என்றும்
- அத்தன் சாயி
- அம்மையும் அப்பனுமாகி
- இம்மையிலும் மறுமையிலும்
- துணையாவான் தூயவன் சாயி
- கவிஞர்
- ஹரிஹரன்