நரனை தேடியே வந்திட்ட நாரணன்

Sairam! This is available only in Tamil*

  • காணாது உன்னை
  • களைத்தே இருந்திட்டேன்
  • நீயே வராததால்
  • நானே தேடிவந்துள்ளேன் உன்னிடம்
  • பக்குவமாய் அறிவுதந்து
  • மானிடராய் முதலிடத்தில்
  • நல்ல மனத்தினையும் அளித்திட்டேன்
  • பொல்லாத உலகினில் வாழ்ந்திட
  • நில்லாது மாறுகின்ற
  • எண்ணமதை
  • மனத்திலே புகுத்தி
  • மாய உலகின்
  • பொய்மை தோற்றத்தில்
  • மனமுவந்து மூழ்கியே
  • சத்தான பரம்பொருளானயென்னை
  • மதிகெட்டு மறந்திட்டாய்
  • வினைகளில் கட்டுண்டு
  • விளையாடிய வீபரீதத்தால்
  • மீளவே முடியாது
  • மீண்டும் பல பிறவிகண்டாய்
  • தர்மத்தின்வடிவெடுத்து
  • அதர்மத்திலிருந்து மீட்டிட
  • அறத்தினை உபதேசிக்க
  • மறக்காது தானாகவே வந்துள்ளேன் தரணிதனில்
  • சத்தியமே என் வாழ்க்கை
  • சேவைப் பணியே என்
  • சுவாசம் ஆகும்
  • நல்லுரையே உடலாகும்
  • உன் மகிழ்ச்சியே
  • என் உணவாகும்
  • மெய்தனை அறிந்து
  • பொய்மையெனும் உடல் பற்றறுத்து
  • பரவசமொடு என்னிடம் சேர்ந்திட
  • பரமேயான சத்தியன்
  • அழைக்கின்றேன்
  • நரனே நாரணனே
  • நேரினில் வந்துள்ளதை
  • முரண்படாது ஏற்று
  • முன்னேற்றம் காணவே
  • முன் வருவாய்
  • மன்னவன் சாயியை நோக்கி
  • காலமெல்லாம் உனக்காகவே
  • காத்திருக்கும் காப்பாளன்
  • சத்தியமான சாயியிடம்
  • வந்திடுவாய் மானவனே
  • உன் குணம் செயல் பாராது
  • உன்னை தட்டாது ஏற்பேன்
  • முன்னால் வா
  • முந்தியேவா
  • முதலில் வா
  • முத்திதனைப் பெற்று
  • முத்திரை பதித்திடவா
  • சத்தியன் உனக்கேயென காத்திருப்பான் என்றும்
  • அத்தன் சாயி
  • அம்மையும் அப்பனுமாகி
  • இம்மையிலும் மறுமையிலும்
  • துணையாவான் தூயவன் சாயி
  • கவிஞர்
  • ஹரிஹரன்
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0