அரனும் அறியுமாய்
- அரனும்அரியுமொன்றாகி, உயிர்களுக்கு அரணாயிருந்து
- வாழவைப்பாய்.
- சிவனும் சக்தியுமென்றாகிச் சிவசக்தி
- ஸ்வரூபமா யருள்பாலிப்பாய்
- ஸ்ரீ ராம, கிருஷ்ணனுமா யவதரித்துப் பர்த்தியை யிப்பாரே
- நோக்கி வியக்க வைத்தாய்
- பிரசாந்திக் கணபதியும், வேலவனுமாய்க், காட்சிதந்து
- மேதினியிலான்மீகச், சனாதன தர்மம் வாழ வழிவகுத்தாய்
- விட்டல பாண்டுரங்கனாய்ச், சீரடி, பர்த்தியை யுன்னவதாரத்
- திருத்தலமாக்கினாய், ஆன்மக் களமாக்கினாய்
- பிரம்மா, விஷ்ணு, சிவமாய்த் தத்தாத்ரேயராய்த்
- திரு அவதாரம் செய்தாய்
- புத்தர், ஏசு, நானக், மகா வீரராய்ச், சர்வமத சம்மதமாக்கியே
- அவரவர் தெய்வமாயுலகினில், வழிபடச் செய்வித்தாய்
- சத்திய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையிலுன், கீதைப்பாதை
- வழி நடக்கச் செய்வித்துச் சனாதன சாரதியாகி
- அனைத்துச் சேவை களாற்றிடப் பணித்தாய்
- முத்தேவியராய்ச், சக்தியாய், மூவுலகம் வலம் வந்தாய்
- முப்போதுமெப் போதும் நான்குயுகமும், வியாபகமாய்
- நலம், குலம் தந்தாய், குற்றம் களைந்தாய்
- சர்வமாய்ச் சர்வ தர்ம சகல விஸ்வரூபப் பரப்பிரும்மமே
- இப்போதும் இறங்கி, இரங்கி வந்துதானே, தானாயருள்கிறாய்
- ஸ்ரீ சத்ய சாயி நாத தெய்வமே உன் பாதார
- விந்தங்களுக்கு வந்தனம்
– தமிழரசி பாலசுப்பிரமணியம்