ஆராதனை நாளில்

  • ஒவ்வொரு மூச்சிலும் உன் ஆராதனைதான் தொடர்கிறது
  • சுவாசமே, வாசமே, சுவாசகமாய் நடக்கிறது
  • சத்தியத்தை விட உன்னதம் வேறேதும் இல்லை
  • ஸ்ரீ சத்திய சாயி நாதா உனைத் தவிர, சாஸ்வதம்
  • உலகில் வேறுறவுகள் யாதுமில்லை, யாருமில்லை
  • மாயையை விலக்கி, மனதை விளக்கித் தெளிவேற்றி
  • அறிவை மெருகேற்றிப் பக்தியில் பெருக்கேற்றி, உலகியலில்
  • இன்பதுன்பம் சமமாய்க்கொள்ள உருவேற்றி
  • வாழ்வியலில், வாழ்வாங்குவாழ வைப்பாய்
  • ஆராதனை நாளில் உயிர்களுக்குக் காட்சி தந்து மாட்சி செய்து
  • மீட்சியளித்திட வுன்கருணைத் துணைவேண்டும்
  • இரு வினைகளால் வரும் அல்லன நீக்கி நல்லன நல்கியே
  • தனிமனித மனமும், வீடு, நாடு, உலகும்
  • பல்லுயிர்களும் நற்சாந்தி பெறப்
  • பிரசாந்திக் கருவறைத் தெய்வமே
  • நித்தியச் சத்தியச் சாந்தியருளவர வேண்டும்
  • சுவாமி சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0