ஆடியிலே
- ஆடியிலே ஆடி வருகிறாள் ஸ்ரீ சாயி காமாட்சி
- தேடி வரும் பக்தர்களை நாடிவரும் அன்பர்களைப் பாடி வரு
- மடியார்களைக், கூடித் தொழும் நற்பவி மனங்களை
- ஓடி வந்து காத்திடவே ஆடி வரும் ஆழித் தேர் போல
- அழகாய் வருகிறாள்
- தன்னைப் பணிபவர் உலகியல் பற்று, பந்தங்களைத்
- துதித்த பொழுதே, அறவேயும் ஒழித்து விடுகிறாள்
- பாந்தமாய்க், கரிசனம் கொண்டு காந்தமாய்
- இதயங்களை ஈர்த்துச் சொந்தமாய்ச் சிம்மாசனத்தில்
- பிரசாந்தி தரச் சாந்தமாய்க் கொலுவிருக்கிறாள்
- ஸ்ரீ காமாட்சி தேவியினருட் கடாட்சம் ஒரு கணப்பொழுது
- அவளைத் துதிப்பவர்மேல் பட்டால்போதும் எல்லோராலும்
- போற்றி மதிக்கும் நிலையை அடைவர்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையுடன், வாழ்வியலில்
- பெரும் அருளைப் பொழிவாள்
- காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சியா,
- மெங்கள் சாயி பர்த்தீஸ்வரியே
- உனக்கு ஆனந்த ஆத்மவந்தனம், அனந்தகோடி சரணாகதிகள்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்