சுந்தர பாதம்

  • சுந்தர பாதம் சத்யசாயி சுந்தரன் பாதம்
  • சுபிட்சம், சுகந்தம், தரும் மந்திர, அமிர்தப் பாதம்
  • சாந்நித்திய, சாத்வீக, மளித்திடும் சிவமாம் சிவசங்கரன் பாதம்
  • நற்றுணையாவது நமச்சிவாயமே எனும் சிவ,
  • சிவ சக்தி ரூபப்பாதம் ஸ்வரூபப்
  • பன்மதப் பக்தர் பணிந்திடும் பவித்திர உருத்திரப் பாதம்
  • எம்மதமும் சம்மதம் அன்பு மதம் தான் நம் மதம்
  • என்று உரைத்திடும் ஸ்ரீ சத்திய சாயீசன் பாதம்
  • பக்திப்பிரவாகத்தில் திளைத்திடச் செய்யும்
  • பரசிவ ஹர சிவ பரமபதப் பாதம்
  • நித்திய சனாதன தர்மத்தில் நிலைக்க வைக்கும் சத்ய
  • தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையாம், ஆனந்தப் பாதம்
  • மதுரா, பிருந்தாவன, நந்தகோப, கோவர்த்தன், பாதம்
  • ஏழுமலை ஏறிவந்து துதித்திடும் ஏகாந்தன் பாதம்
  • ஸ்ரீராம பர்த்திவாச ஸ்ரீசத்ய சாயீசன்
  • சாயி ராமன் சாயி கிருஷ்ணன் பாதம்
  • சகல உயிர்களையும் காத்தருளவே அவதாரமாய் வந்த
  • ஏகன், அனேகன், எங்கள் தெய்வத்தின் தெய்வமாம்
  • ஸ்ரீ சத்ய சாயி பாதம்தான் என்றுமே சதம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0