சடுதியில் வருகவே

  • சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால்
  • உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது
  • அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக்
  • கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய்
  • வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும்
  • உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்
  • உன் அருளால் தானே
  • இதயக்குடவரைக் கோயிலில் வைத்து உன்னைத் துதித்து
  • வரும் பக்தஅன்பர்கள் எண்ணிலடங்காச் சொல்லில்
  • அடங்காக் கணக்கிலடங்காக் கணக்கியல்தான்
  • சாயி சிவமே நீ சிவசக்தி ரூபமாய்
  • அச்சக்தியின் பாலகராம் கந்தனாய்க், கணபதியாய்,
  • சன்மதப்பக்தர்க்கும் சாந்நித்யமளித்திடச் சடுதியில்
  • வந்தே காத்தருள்வாயே
  • முத்தேவியராய் முழுமதிபோல் வந்து பூரணத்துவமளிப்பாய்
  • சித்தேஸ்வர ஸ்ரீ சைலபுரீசனே மனிதத்தில் மலர்வாயே
  • பன்மதப்பக்தருக்கும் அவரவர் தெய்வமாய்க் காட்சி தந்து
  • கருணை செய்யும் சாயி சிவமே, தவமே எப்பெயரில்
  • அழைத்தாலும் எப்போதும் வந்து காத்தருளும் பரப்பிரும்மன்
  • உன் பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி
  • ஆனந்த வந்தனங்கள் சரணம் சரணம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0